ராமாயணமா விடாமுயற்சி?.. மகிழ் திருமேனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Author: Hariharasudhan
6 February 2025, 1:34 pm

அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம், நவீன ராமாயணம் போன்று உள்ளது என்பதை குழுவினரிடம் கூறியதாக மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகெங்கும் இன்று வெளியாகியுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தங்களது நடிகரை திரையில் காண ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது, த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அனிருத் போன்ற படக்குழுவினரும் ரசிகர்கள் உடன் படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி பிரபல சர்வதேச ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், அவர், “இதையேத்தான் என் குழுவிடம் நானும் பேசிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக அதனை அப்படிச் சொல்லலாம். நாங்கள் சொன்ன உதாரணமும் ராமாயணம் தான்” என விடாமுயற்சி படம் நவீன ராமாயணமாக உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மகிழ் திருமேனி பதிலளித்துள்ளார்.

மேலும், அஜர்பைஜானை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் மகிழ் திருமேனி விளக்கியுள்ளார். அதில், “இந்தப் படம் ஒரு சாலை வழிப்பயணம் போலத்தான். எங்களுக்கு நீண்ட நெடுஞ்சாலை, அதன் இரண்டு பக்கமும் வறண்ட பாலைவனம் போன்ற திறந்தவெளி என்ற இப்படியான ஒரு அமைப்பில் வெப்பமான, பாலைவனம் போன்ற ஒரு இடம் தேவைப்பட்டது.

Magizh Thirumeni about AJithkumar Vidaamuyarchi

அதற்கு அபுதாபி பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துதான் முதலில் நாங்கள் அங்கு சென்றோம். அப்படி, அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய பகுதிகளில் நல்ல இடங்களும் கிடைத்தன.

ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இன்னும் சில பிரச்னைகளும் அதில் இருந்தன. எனவே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் அஜர்பைஜான் நல்ல மாற்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றியது.

இதையும் படிங்க: கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

எனவே, அங்கு சென்று பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே இடங்கள் அங்கேயும் இருந்தன. தொடர்ந்து, அங்கேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அஜித்துக்கும், அந்தப் பகுதியின் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்தோம். அவருக்கும் பிடித்திருந்தது.

எனவே, படப்பிடிப்பை அங்கு நடத்தினோம். தொடக்கத்தில் வானிலை காரணமாக இடையூறு ஏற்பட்டு தாமதமானாலும், படம் பார்க்கும்போது, அது இந்தக் கதைக்கு சரியான இடம் என்பது உங்களுக்கேத் தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Venkat Prabhu Wishes Ajithkumar Vidaamuyarchi சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்.. விடாமுயற்சிக்கு விஜய் பட இயக்குநர் பாராட்டு மழை!
  • Leave a Reply