நுரையீரலில் சில இன்ஃபெக்ஷன்… ரவீந்திரனின் தற்போதைய நிலையால் நொறுங்கிப் போன மகாலட்சுமி..!(வீடியோ)
Author: Vignesh10 January 2024, 12:37 pm
ஒரு சில படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் பேட்மேன் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறார். ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் பேசப்பட்டு வந்தது.
அதை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன்னர் ரவீந்தர் பல கோடி பணமோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் நிலையில், ரவிந்தர் தன் உடலில் சில பிரச்சனைகள் இருப்பதாக பிக் பாஸ் விமர்சன வீடியோ ஒன்று தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில், தனக்கு நுரையீரலில் சில இன்ஃபெக்ஷன் இருப்பதாகவும், நெஞ்சு பகுதியில் அதிக வலி இருப்பதாகவும், தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஒரு வாரம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், கூறியிருந்தார். மேலும், ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் மூச்சு சுவாசம் செய்யும் சிகிச்சைக்காக முகத்தில் இந்த டியூப் போட்டுள்ளதாக ரவீந்தர் தெரிவித்திருக்கிறார். இதற்கு பலரும் குணம் பெற ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், ரவீந்திரனின் தற்போது நிலை குறித்து மகாலட்சுமி வேதனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.