ஒரு சில படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் பேட்மேன் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறார். ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் பேசப்பட்டு வந்தது.
அதை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன்னர் ரவீந்தர் பல கோடி பணமோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து மாயா பூர்ணிமாவுக்கு எதிராக பேசி வந்த ரவீந்தர் தற்போது, மனைவி மகாலட்சுமியுடன் இணைந்து பிக்பாஸ் விமர்சனம் செய்து உள்ளனர்.
மாயா, பூர்ணிமா பிரிந்து இருப்பதால் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும். இதனால், இருவரும் தனித்தனியாக விளையாடுவார்கள். மேலும், மாயாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரது நடவடிக்கைகள் பிடிக்கும் என்று மகாலட்சுமி தெரிவித்ததை கேட்ட ரவீந்தர் ஷாக் ரியாக்ஷன் கொடுத்து பிரதீப்பை அனுப்பிய மாயாவை உங்களுக்கு பிடிக்குமா என்று கூறி கிண்டல் செய்தார்.
என்னை மாட்டி விடுவதில் முதல் ஆள் இவர் தான் என்றும், மகாலட்சுமி சிரித்தபடி தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னைப் பொறுத்தவரை பிரதீப்பை அனுப்பி இருக்கக் கூடாது. அவரது, கருத்தை கேட்காமல் வெளியில் அனுப்பியது நியாயம் இல்லாதது தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.