இராணுவத்துல வேலை.. – மனைவி குறித்து ஆச்சர்ய தகவலை வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்..!

Author: Vignesh
25 June 2024, 4:40 pm

தமிழ் சினிமாவில் சிங்கம் புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர், இயக்குனராக இருந்தாலும் இவருவர் காமெடி நடிகராகவே நடித்து வந்த நிலையில், முதல் முறையாக மகாராஜா திரைப்படத்தின் மூலமாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இது ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார். நடிகர் சிங்கம்புலி பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அதற்குப் பிறகு ரெட், மாயாவி படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். ஆனாலும், அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்க தொடங்கியது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம் புலியை யாராலும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. அதிலும், தன்னுடைய அப்பாவான ஜீஎம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நீங்கள் எல்லாம் மாடு முட்டி தான் சாகப் போகிறீர்கள் என்று சாபம் கொடுப்பது ரசிகர்களிடையே இவரை ரசிக்க வைத்தது.

அதற்குப் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம் புலி காமெடி கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால், விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருக்கிறார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்து வருகிறது. படத்தைப் பார்த்து பல ரசிகர்கள் ஏன் சிங்கம்புலி இப்படி செய்து விட்டீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். அவர் அளித்த பேட்டியில் அதில், என்னுடைய மனைவி அந்த மகாராஜா படத்தை பார்க்கவில்லை. என்னுடைய குழந்தைகள் அந்த படத்தை பார்த்து விட்டார்கள். ஆனால், அவர்கள் சரி தவறு எது என்று சொல்லவில்லை. ஆனால், மனைவி படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாரோ என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தார்.

அதோடு என்னுடைய மனைவி என் மாமா பொண்ணு தான், அவர்களுடைய பூர்வீகம் அந்தமான் இப்போ ஆர்மியில் கர்னலா இருக்காங்க, அவங்க பெரும்பாலும் ஹிந்தி படங்கள் தான் பார்ப்பாங்க, இதுவரை என்னோட ஐந்து படங்கள்தான் பார்த்திருப்பாங்க, இப்ப மகாராஜா படத்தை பார்த்துட்டு என்ன சொல்லுவாங்கன்னு தெரியல, அவர்களை எப்படி பேஸ் பண்றதுன்னு தெரியல என்று சிங்கம்புலி அந்த பேட்டியில் பேசியிருந்தார். இந்நிலையில், இந்த பேட்டியை பார்த்த பலரும் காமெடி நடிகராக எல்லோரும் சிரிக்க வைத்த சிங்கம் புலியின் மனைவி ராணுவத்தில் கர்னலாக இருக்கிறார் இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் மனைவியை பற்றி சிங்கம் புலி பெரிதாக இதுவரைக்கும் எந்த பேட்டியிடம் பேசவில்லை என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்