சீனாவில் களைகட்டிய மகாராஜா..படக்குழு போட்ட அடுத்த பக்கா பிளான்..!
Author: Selvan1 December 2024, 4:03 pm
மகாராஜா படத்தை உலக அளவில் கொண்டு செல்லும் திட்டம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம் விஜய் சேதுபதிக்கு 50 வது படமாக அமைந்து,மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் சீன மொழியில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே சீன ரசிகர்களை கவர்ந்து தற்போதுவரை 25 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை புரிந்து வருகிறது.
இதையும் படியுங்க: அஜித்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக பிரபல நடிகர் வீடியோ வெளியீடு..!
கொரோன காலத்திற்கு பிறகு எந்த ஒரு இந்திய படமும் சீனாவில் இந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.இதனால் தற்போது படக்குழு அடுத்தக்கட்ட பிளான் போட்டுள்ளது.
அதாவது தமிழ் படங்களுக்கு ஜப்பானில் அதிகளவு வரவேற்பு இருப்பதால் மகாராஜா படத்தை அங்கே ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருகிறது.இதனால் விஜய்சேதுபதியின் மகாராஜா படத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.