ஆஹா இதுவல்லவா கண்டுபிடிப்பு! ஐஸ்வர்யா ராயின் கண்ண பார்த்தீங்களா? அந்த அழகுக்கு காரணம்… அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
Author: Shree22 August 2023, 3:49 pm
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். தற்போது 50 வயதாகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்ப்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ஐஸ்வர்யா ராயின் அழகை குறித்தும் அவரது கண்களை குறித்தும் மகாராஷ்டிரா அமைச்சர் விஜயகுமார் பேசியிருக்கும் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உண்டாகியுள்ளது. குறிப்பாக
ஐஸ்வர்யா ராயின் அழகான கண்களுக்கு அவர் தொடர்ச்சியாக மீன் சாப்பிடுவதுதான் காரணம் என கூறியிருக்கிறார். ஒரு அமைச்சர் திரைப்பட நடிகையையை குறித்து இப்படி பேசியிருப்பது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இவரு நம்ம ஊரு தெர்மாகோல் விஞ்சானியையே மிஞ்சிடுவார் போலயே.