Pregnancy Test செய்த மகிமா நம்பியார்? அந்த நடிகருடன் டேட்டிங் ஓபன் டாக்..!

Author: Vignesh
14 September 2023, 9:45 am

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்தார் மஹிமா.

இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

mahimanambiar -updatenews360

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார். இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

mahimanambiar -updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மகிமா நம்பியாரிடம் தொகுப்பாளர் நீங்கள் யாரையாவது டேட் செய்ய விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர் ஹரிஷ் கல்யானை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்றும், எந்த நடிகருக்கு முத்தம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி என்றும், எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் அவர் சினிமாவில் மட்டும் அல்ல குடும்ப வாழ்க்கையிலும் மிகுந்த ஒழுக்கமானவர் அதனால், தான் அவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றும், நீங்கள் இதுவரை Pregnancy Test எடுத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அதிர்ச்சி அடைந்த அவர் என்ன கேள்வி இது நான் அப்படியெல்லாம் செய்ததில்லை என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 255

    0

    0