கயல் சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகல் : இனி இவருக்கு பதில் இவரா? இல்லத்தரசிகள் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 6:28 pm

தமிழ் சீரியலிலேயே, நம்பர் ஒன் சீரியல் கயல். சன் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

இதில் கயல் கதாப்பாத்திரத்தில் நடிகை சைத்ரா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான, சஞ்சீவ் கதாநாயகனாக இருக்கிறார்.

டி.ஆர்.பியில் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே முன்னனியில் இருக்கிறது. அப்பா இல்லாத குடும்பத்தில், தன் மொத்த குடும்பத்தையும், காக்கும் பொறுப்பை மூத்த மகளாக எடுத்துள்ளார் கயல்.

கயலை சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறார் ஹீரோ. பொறுப்பே இல்லாத அண்ணன், விளையாட்டுத்தனமான தம்பி, இரண்டு தங்கைகள் என்று கதை விறு விறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் தான், கயலின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை சீரியலை விட்டு விலகினார். அது மட்டும் இல்லாமல் சில மாதங்களுக்கு முன் தான், கயலின் தம்பி கதாப்பாத்திரத்தில் நடித்த அவினாஷ் ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து விலகியிருந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் ஹரி என்பவர் அன்பு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் ஹரியும் சீரியலில் இருந்து விலகப் போவதாக அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், சில தனிப்பட்ட காரணங்களால் சீரியலை விட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இனிமேல் இவருக்கு பதிலாக யார் வருவார்கள்? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…