“என்ன பத்தி தப்பா பேசுறாங்க”.. – தனது லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்த மைனா பட நடிகையின் சோகமான வாழ்க்கை..!
Author: Vignesh30 January 2023, 1:30 pm
தன் வாழ்க்கையில் நடந்த சோகமான தருணங்களை மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சூசன் ஜார்ஜ், பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வில்லியாக களமிறங்கும் கதாபாத்திரங்கள், தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். கடந்த 2010 ஆம் ஆண்டு அந்த வகையில் அமலாபால் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தில், போலீஸ்காரர் மனைவியாக சுதா என்ற பாத்திரத்தில் நடிகை சூசன் ஜார்ஜ் அறிமுகமானார்.
இந்த படத்தைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து நடிகை சூசன் ஜார்ஜ் மிரட்டி இருந்தார். இவர், தன் சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சூசன் ஜார்ஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது, படத்துக்கு மட்டும் தான் நான் அந்த மாதிரி, நிஜத்துல நான் ரொம்ப அமைதியான ஆள் என்றும், ஆனால் படத்தில் என்னைப் பார்த்த பலரும், நீங்க ஒரு rugged girl என்றும், படத்துல சரக்கு அடிச்சிட்டு தான் நீங்க நடிக்கிறீங்க போல எனவும் மிகவும் கேவலமாக பேசியது என்னை மிகவும் வேதனை படுத்தியது.
இதையெல்லாம் கேட்க கேட்க ஒரு கட்டத்தில் ரொம்ப வேதனையாக இருந்தது ஆனால், இதெல்லாம் வெறும் படத்திற்காக மட்டும் தான் என என்னை நானே தேற்றிக் கொண்டு தான், ஆனால் அதையெல்லாம் தாண்டி, சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதற்காக தற்போது வரை நடித்து வருகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.