10வருடத்திற்கு முன்பே மேஜர் முகுந்தை கொண்டாடிய மலையாள படம்:அட இது தெரியாம போச்சே ….!
Author: Selvan14 November 2024, 1:27 pm
சமீபத்தில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு பிறகு யார் இந்த மேஜர் முகுந்த் என்ற தேடல் தான் வைரல் ஆகி வருகிறது.

மேஜர் முகுந்தை கொண்டாடிய அமரன்
படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையேயான காதல் போன்ற விசயங்கள் சினிமா ரசிகர்களை பிரமிக்கவைத்தது.அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஒரு பேட்டியில் நான் என் கணவரை மீண்டும் இந்த உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் இந்த படம் எடுக்க சம்மதித்தேன் என்று சொல்லியிருப்பார்.

மலையாளத்தில் மேஜர் முகுந்த்
2014 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதிகள் மீதான துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த மேஜர் முகுந்த் பற்றி நாம் 2024 ஆம் ஆண்டு படம் எடுத்திருக்கிறோம்.ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் மேஜர் முகுந்தை கொண்டாடிருப்பார்கள்.
பிரித்விராஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிக்கெட் 43 படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும் .
இதையும் படியுங்க: நெல்சன் எடுத்த அதிரடி முடிவு …தோல்வியால் நடந்த விபரீதம்..!
இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருக்கும் பிரித்விராஜ், இன்னொரு ராணுவ வீரருடன் போனில் பேசுகிறார்.அப்போது அந்த ராணுவ வீரர் பிரித்விராஜிடம் இங்கு மேஜர் முகுந்த் சார் உட்பட 3 பேர் இறந்துவிட்டனர் சொல்ல அதற்கு பிரித்விராஜ் என்ன முகுந்த் சார் இறந்துவிட்டாரா, அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறதே என கவலையோடு சொல்கிறார்.அதற்கு அந்த ராணுவ வீரர் என்ன செய்வது நம்முடைய நிலைமை இப்படித்தான் என்று சொல்லுவார்.
படத்தின் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.