சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய பிரபல தொகுப்பாளர்.. அப்போ, அவருக்கு பதில் இவரா..!

Author: Vignesh
22 February 2023, 11:30 am

விஜய் டிவி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று சொல்லலாம். இதன் 9வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் தற்போது பல பாடல்களை பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

super singer - updatenews360

மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். இவர்கள் இருவருக்காகவே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்கள்.

இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடுத்து வரும் எபிசோடை மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க போவது இல்லையாம்.

அவருக்கு பதிலாக ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் ரியோ ராஜ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கவுடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் மாகாபா வரமாட்டார் என்ற செய்தி பலருடைய காதுக்கு இனி அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே வரமாட்டார் என்பது போல் போய் செர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

super singer - updatenews360

ஆனால் அது உணமையில்லை, வெறும் ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டுமே மா கா பா வரமாட்டடாராம். அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா கா பா வந்துவிடுவார் என சொல்லப்படுகிறது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!