பிரியங்காவுடன் மனக்கசப்பு? அமீர் – பாவனி திருமணத்தில் பிரியங்கா வந்ததால் புறக்கணித்த மாகாபா?!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2025, 2:29 pm
அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இரண்டாவது திருமணம் என்பதால் வெளியில் பெரியதாக தெரியாதபடி இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். அதே சமயம் இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் அத்தனை பேரும் பங்கேற்ற நிலையில் மாகாபா ஆனந்த் புறக்கணித்தார்.
இதையும் படியுங்க: ராத்திரில எனக்கு பொண்டாட்டிதான், மத்தவங்களுக்கு எப்படி?- கொதித்தெழுந்த சரத்குமார்! ஏன் இப்படி?
தொடர்ச்சியாக பிக் பாஸ் புகழ் அமீர் – பாவனி திருமணமும் நடந்தது. இந்த திருமணத்திலும் மாகாபா ஆனந்த் பங்கேற்கவில்லை. பிரியங்கா பங்கேற்றதால் தான் மாகாபா ஆனந்த் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.
பிரியங்காவும், மாகாபாவும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், பிரியங்காவின் 2வது திருமணம் முன் கூட்டியே மாகாபாவுக்கு தெரியுமாம். இருந்தும் அவருக்கு வசியை பிரியங்கா திருமணம் செய்வது பிடிக்கவில்லை என கூறப்பட்டது.

மேலும் அமீர் – பாவனி திருமணத்தை பிரியங்கா தான் தனது தலைமையில் நடத்துகிறார் என்பதை அறிந்து மாகாபா புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படி பல்வேறு தகவல் பரவிய நிலையில் மாகாபா வராததற்கு விடை கிடைத்துள்ளது.
அதாவது, மாகாபா ஆனந்த் தனது திருமண நாளைமுன்னிட்டு மனைவி சூசன் மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவு செல்வது ஏற்கனவே திட்டமிடப்பட்டதால் அவர் திருமணத்திற்கு செல்ல முடியாததாக காரணம் சொல்லப்படுகிறது.
மாலத்தீவு பிளானும், முன் கூட்டி தான் போட்டிருப்பார்கள், திருமணமும் முன் கூட்டித்தான் போட்டிருப்பார்கள், இதில் எது உண்மை என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
