பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.
இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற 20 வயது மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.
அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா. தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நடிகர் அர்ஜுன் கபூர் -காதலி மலாய்க்காவை பிரேக்கப் செய்துவிட்டதாக செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மலைகா அரோரா அர்ஜுன் கபூர் உறவினர்களான குஷி கபூர், போனி கபூர், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்துள்ளார். இருந்தாலும் காதலன் அர்ஜுன் கபூரை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்.
மேலும் அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில் மலாய்கா தனது இன்ஸ்டா ஸ்டோரீஸில் “மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம். கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள்” என கூறி பதிவிட்டுள்ளார். அர்ஜுன் கபூர் மலாய்கா அரோராவை காதலிப்பதற்கு அர்ஜுன் கபூர் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும் இதனால் அவர்கள் சந்திக்க கூட விடுவதில்லை என்றும் மேலும் அர்ஜுன் கபூருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.