தப்பு பண்ணியிருக்கேன்; இதை சொல்ல ஏன் தயங்கனும்.. வெளிப்படையாக பேசிய மாளவிகா மேனன்..!
Author: Vignesh7 February 2024, 2:52 pm
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது. முன்னதாக அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்போது, கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், மாளவிகா மேனன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு, சினிமாவில் அவருக்கு நடந்த அனுபவங்களை பற்றி பேசியுள்ளார். அதில், 2011 ல் சினிமாவை ஆரம்பித்த தனக்கு சரியான படங்களை தேர்வு செய்ய அப்போது தெரியவில்லை என்றும், ஆரம்ப காலகட்டத்தில் படங்களை தேர்வு செய்வதில் தான் நிறைய தவறுகளை செய்ததாகவும் தான் செய்த தவறினால் பல படவாய்ப்புகளையும், நல்ல கதாபாத்திரங்களை மிஸ் செய்து விட்டதாகவும்,
அப்போது அந்த படம் மற்றும் கதை குறித்த புரிதல் இல்லாமல் அப்படி நிறைய படங்களை தான் தவற விட்டு இருக்கிறேன் என்றும், இதை சொல்ல தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றும், அப்படித்தான் பல படத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மிக வலுவானதாக இருக்கும் பின் தவறி விட்டு விட்டோமே என்று ஏங்கியிருந்ததாகவும், இனிமேல் அப்படியான ஒரு தப்பை செய்யக்கூடாது என்று தற்போது வருந்தி வருவதாக மாளவிகா மேனன் தெரிவித்துள்ளார்.