நான் மட்டும் நடிக்க வரலேன்னா… அந்த தொழில்ல இறங்கிருப்பேன் மாளவிகா மோகனன் ஓபன் டாக்..!
Author: Vignesh25 July 2024, 4:56 pm
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் பிரமோஷன் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பேசிய மாளவிகா தனக்கு வைல்ட் லைப் போட்டோகிராபர் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், ஒருவேளை சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் நான் போட்டோகிராபராக இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டா பக்கத்தில் வைல்ட் லைப் போட்டோகிராபி பக்கம் இருப்பதாகவும், அதில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.