எனக்கென்ன குறைச்சல்… நயன்தாராவுக்கு கொடுக்கும் சம்பளத்தை எனக்கும் கொடுங்க : பிரபல நடிகை கறார்!!

Author: Vignesh
30 December 2022, 5:00 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  

malavika-mohanan04-copy

அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார். இந்த நிலையில், மாளவிகா மோகனன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை தாக்கி பேசி இருந்தார். “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயின் முழு மேக்கப் உடன், லிப்ஸ்டிக் போட்டு, முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் மாளவிகா தாக்கி பேசி இருந்தார்.

nayanthara- updatenews360.jpg 2

அந்த விஷயம் குறித்து பேட்டியில் நயன்தாரா பதிலடி கொடுத்துள்ளார், “அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.”

“சோகமாக இருக்க கூடாது என என்றுடைய இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்” என நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இதனையடுத்து, ஆரம்பத்தில் இருந்து பெரிய நடிகர்களின் படங்களில் மாளவிகா மோகனன் நடித்திருந்தாலும் சரியான ஹிட் படம் எதுவும் இல்லை.

Malavika Mohanan - updatenews360

மாளவிகா மோகனன் இதுவரை எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை என்றாலும் சம்பள விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக உள்ளாராம். அடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனம் புதிய படத்திற்கு அவரை கமிட்செய்ய சென்றபோது அவரது சம்பளத்தை தாண்டி கோடிகளில் அதிகம் கேட்கிறாராம்.

இதனிடையே, நயன்தாராவுக்கு கொடுக்கும் சம்பளத்தை எனக்கும் கொடுங்க என்று இவர் கண்டிப்பாக உள்ளாதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதனால் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் அவரை கமிட் செய்யலாமா வேண்டாமா என பின்வாங்கி விட்டார்களாம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 437

    0

    0