“இதுக்கு பச்ச பச்சையா திட்டி இருக்கலாம்..” பிகினி Photo கேட்ட ரசிகரை ஓடவிட்ட மாளவிகா மோகனன்.!
Author: Rajesh25 June 2022, 11:03 am
அது என்னனு தெரியல, மாளவிகா மோகனன் Photos வந்தா பசங்கள கையிலியே பிடிக்க முடியல, வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம், அதுல கால விட்டா ஒடச்சிவிடுவோம்.. என்பது போல மாளவிகா மோகனன் பற்றி தவறாக யாராவது பேசினால், காலை உடைச்சுடுவோம், என்று சுற்றி திரிகிறார்கள் மாலு ரசிகர்கள். அவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது தெரியவில்லை. மாளவிகா மோகனன், தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை.
இந்நிலையில் தற்பொழுது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அவரிடம் நீங்கள் கடைசியாக எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ஒருவர் கேட்க உடனடியாக தான் கடைசியாக அணிந்திருந்த குட்டியான உள்ளாடை போன்ற மைக்ரோ பிகினி உடையை புகைப்படம் எடுத்து ரிப்ளை செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.”இதுக்கு பச்ச பச்சையா திட்டி இருக்கலாம்..” என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.