அந்த பிரச்சனை.. விக்ரம் படத்துல நடிச்சி 5 டாக்டர்கிட்ட போனேன் பகீர் கிளப்பும் மாளவிகா மோகனன்..!
Author: Vignesh25 July 2024, 9:19 am
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!
இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Adjustment பண்ண வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
இந்நிலையில், இது குறித்து பேசிய அவர் என்ரோல் மிகவும் கொடூரமானது என்பதால், எனக்கான மேக்கப் என்பது மிகவும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஷூட்டிங் இடத்தில் ஒரு குடை கூட எங்களுக்கு கிடையாது. மேக்கப் போடும்போது, ஆர்வமாக இருக்கும் நடிக்கும்போது ஆர்வத்துடன் இருந்தோம். கடும் வெயிலில் புழுதி குப்பைகளுக்கு மத்தியில் நடிக்கும் போது எங்களுக்கு தெரியவில்லை. கடும் வெயிலால் எங்கள் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஹோட்டலுக்கு திரும்பிய பின் தான் தெரிய வரும். கண்களில் லென்ஸ் போட்டு நடிக்க வேண்டி இருந்தது. என் கண்களின் பார்வை பிரச்சனை ஏற்பட்டது. முகத்தில் தோல் பிரச்சனை என்று இருந்ததால் ஷூட்டிங் மத்தியில் 5 மருத்துவர்களை சந்தித்தேன் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.