“தங்கலான்” படத்திற்கு மாளவிகா வாங்கிய சம்பளம்…. எத்தனை கோடி தெரியுமா?

Author:
16 August 2024, 3:38 pm

சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது. இந்த திரைப்படம் இன்று சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எல்லோருமே கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ. 17 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்ப்போது தங்கலான் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் ஆரத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த ரோலில் அவர் நடிக்க சம்பளமாக ரூபாய் 2 கோடி வாங்கியதாக தற்போதைய தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது மிக குறைவு தான் இன்னும் கொஞ்சம் கூட கூடுதலாக தந்திருக்கலாம் என தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…