டகுலுபாஸ் வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்… ரசிகர்களிடம் மெட்ராஸ் பாஷை பேசிய மாளவிகா (வீடியோ)

Author: Shree
20 October 2023, 10:46 am

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாளவிகா வித்யாசமான ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் மெட்ராஸ் பாஷை கற்றுக்கொடுத்து அழகு பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • Adult Comedy Movie Perusu First Day Collection பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!