ரூ. 500 கோடி படமா இருந்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்… பீல்டு அவுட் ஆகப்போகிறாரா டஸ்கி அழகி?

Author: Shree
31 July 2023, 7:49 pm

பிரபல ஒளிப்பதிவாளர் கேயு மோகனனின் மகளான நடிகை மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனார்.

நல்ல அழகான தோற்றம் கொண்டு வசீகர கவர்ச்சி காட்டி வாலிபத்தை அவ்வப்போது இழுக்கும் நடிகை மாளவிகா மோகனன் பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி அலேக்கா கவிழ்த்திடுவார். தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி காட்டி பிழைப்பை ஓட்டி வருகிறார்.

Malavika Mohanan - updatenews360

இதனிடையே அவ்வப்போது ஏதேனும் பேசி சர்ச்சைக்குள்ளாகுவார். அப்படித்தானே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா குறித்து, ”தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்ட போது பதிலளித்த மாளவிகா மோகனன், “நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன். ஒரு மருத்துவமனை காட்சியில், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்” லாஜிக்கே இல்லாமல் நடித்த அந்த நடிகையை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறீர்களோ தெரியவில்லை என விமர்சித்தார். இதற்கு நயன்தாராவையும் பதிலடி கொடுத்தார். இதனால் திரைத்துறை விரும்பிகளால் இருவரும் எதிரிகளாகவே பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து கிடைக்கும் படங்களில் வாய்ப்புகள் தவறவிடக்கூடாது என்பதற்காக எல்லா படங்களில் நடித்து வருவதால் மார்க்கெட் இழந்ததாக கூறும் மாளவிகா மோகனன். இனிமேல் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத ரோல்களில் நான் நடிக்கவே மாட்டேன். அது 500 கோடி வசூலிக்கும் பெரிய படமாக இருந்தாலும் கூட என் கேரக்டருக்கு இம்பார்டென்ட் இல்லை என்றால் நோ தான் என்றார்.

Malavika Mohanan - updatenews360

காரணம் ஸ்கோப் இல்லாத படங்களில் நடித்தால் என்னை யாரும் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் இனி படங்களை தேர்வு செய்து தான் நடிக்க போகிறேன் என அவர் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளித்த நெட்டிசன்ஸ் கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை காட்ட முயற்சி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு நல்ல கதைக்காக காத்திருந்தாள் கூட பீல்டு அவுட் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கூறி அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 374

    0

    0