அம்மா, தங்கை இருக்கும் போதே 10 நிமிடம் அட்ஜஸ்ட்மென்ட்.. அந்த இடத்தில் கைவைத்தார்.. இளம் நடிகை பகிர் தகவல்..!
Author: Vignesh13 April 2023, 4:00 pm
மலையாள சினிமாவில் நடிகை மாளவிகா ஸ்ரீநாத் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். மாளவிகா ஸ்ரீநாத் மதுரம், சாட்டர் டே நைட் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
23 வயதான நடிகை மாளவிகா ஸ்ரீநாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில் மாளவிகா ஸ்ரீநாத், சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். நடிகை மாளவிகா ஸ்ரீநாத்துக்கு ஒருமுறை நடிகை மஞ்சு வாரியருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதற்காக, அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்றதாகவும், அப்போது அங்கு இருந்த ஒருவர் தன்னுடைய மார்பகத்தின் மீது கைவைத்து, ஒரு 10 நிமிடம் தன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு என்று கூறியதாக நடிகை மாளவிகா ஸ்ரீநாத் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தான் அந்த நேரத்தில் கேமராவை தட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து வந்துவிட்டதாகவும், இந்த சம்பவத்தின் போது அறையின் வெளியே அம்மா, தங்கை என எல்லாரும் இருந்ததாக நடிகை மாளவிகா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.