மலையாளம் மாட்டிக்கிச்சு…ROOMக்கே போய் ஜல்சா பண்ண தமிழும் தெலுங்கும் தவிக்குது – கோர்த்துவிட்ட பிரபலம்!

Author:
3 September 2024, 9:30 am

கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டியின் பாலியல் புகார்கள் தொடர்ந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ் சினிமாவிலும் அதன் தாக்கம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக நடிகர் விஷால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசியபோது அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைக்கும் நபர்களை பெண்கள் தைரியமாக அந்த இடத்திலேயே அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

hema-comitteee

இந்நிலையில் இந்த விவகாரத்தை குறித்து YouTube சேனல் பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேசியிருக்கிறார். இந்த பாலியல் தொல்லை விவகாரத்தில் மலையாள சினிமா மாட்டிக்கிச்சு. ஆனால், ரூமுக்கே போய் ஜால்சா பண்ண தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் தவிக்குது.

ஹீரோக்கள் லிஸ்ட் எடுத்தா அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும். ரெடியா இருக்கு யார் மாட்ட போறாங்களோ என கூறி கோர்த்து விட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது… பாலியல் தொல்லை விவகாரம் சர்ச்சையை குறித்து அர்ஜுனிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பூசி மழுப்பி வெளிப்படையா பேச தைரியம் இல்லாமல் அப்படியே போயிட்டாரு.

vishal

அதேபோல் நடிகர் ரஜினியும் அத பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது என்றவாறு சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். பிறகு ஜீவா தமிழ் சினிமாவில் அது போன்ற பிரச்சனைகளே நடக்கவில்லை என வாய்விட்டு மாட்டிக்கொண்டார். இப்படியாக தமிழ் சினிமா இந்த விஷயத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

இதேபோல் நேற்றிலிருந்து தெலுங்கு சினிமாவிலும் இந்த விவகாரம் தலைவிரித்தாட துவங்கி இருக்கிறது. ஏற்கனவே தெலுங்கில் ஸ்ரீ ரெட்டி பண்ண வேலையெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது மீண்டும் இது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

Cheyyaru Balu-updatenews360

நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணம் ஆக போராட்டத்தில் இறங்கி ஈடுபட்டது குறிப்பிடுத்தக்கது. எனவே மலையாள சினிமாவில் ஏற்பட்டிருக்கும் இதே பிரச்சனை தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்தால் லிஸ்ட் எங்கயோ போகும்… பல நட்சத்திர பிரபலங்களின் முகங்களை கிழித்தெறியப்படும் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!