காசி திரைப்பட தயாரிப்பாளர் மரணம்; 60 படங்களை தயாரித்தார்; கண்ணீரில் திரையுலகம்

Author: Sudha
15 July 2024, 2:16 pm

நடிகர் மம்முட்டிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அவரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய, சிபிஐ டைரி குறிப்பு படத்தை தயாரித்து அதன் 5 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாக காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் அரோமா மணி

அவர் கடைசியாக 2013ல் பஹத் பாசில் நடித்த ஆர்டிஸ்ட் என்கிற படத்தை தயாரித்ததுடன் படத்தயாரிப்பில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார்.

தமிழில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை, முரளி நடித்த உன்னுடன், விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்l அரோமா மணி. 65 வயதான இவர் நேற்று தனது இல்லத்தில் திடீரென காலமானார். மலையாளத்தில் அதிக படங்களை தயாரித்துள்ள இவர் தமிழையும் சேர்த்து 60 படங்களை தயாரித்து உள்ளார்.ஏழு மலையாள படங்களை இயக்கியுள்ளார்.

இவருடைய மறைவு மலையாளத் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலையாள முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அரோமா மணி அவர்களின் மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!