லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2024, 10:37 am
2024ஆம் ஆண்டில் குறைவான பட்ஜெட்டில் தரமான படம் எது என்று கூறினால் கண்ணை மூடிக்கொண்டு லப்பர் பந்து படத்தை சொல்லலாம்.
லப்பர் பந்து குழுவை பாராட்டிய மோகன்லால்
கிரிக்கெட்டை மையமாக வைத்து, அழகான காதல் கதையை ஒப்பிட்டு தமிழரசன் பச்சைமுத்து இயக்கியிருப்பார். தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, பாலா சரவணன், சஞ்சனா என நட்சததிர பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்க : விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் சுமார் 45 கோடி வரை வசூல் செய்தது, படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வரு நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது தரமான படம் எடுக்கிறார்கள. குறிப்பாக நான் சமீபத்தில் பார்த்த லப்பர் பந்து படம், சின்ன விஷயத்தை திறமையா எடுத்திருந்தார்கள், அந்த படக்குழுவுக்கு எனது பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.