மம்முட்டியுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் : வெளியானது புதிய படத்தின் போஸ்டர்!!
Author: Vignesh19 January 2023, 12:30 pm
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம் .குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .
விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதனிடையே, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் வித்தியாசமான முதல் பார்வை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Feels surreal..
— Ramya Pandian (@iamramyapandian) January 19, 2023
Thank you for the wonderful opportunity and the great learning experience @mrinvicible sir and @mammukka sir 🙏🏼#NanpakalNerathuMayakkam #LijoJosePellissery #Mammooty pic.twitter.com/h0zBKbKDTl