தமிழ் ஹீரோக்களை தாக்கிய மம்முட்டி…மேடையில் வெளிப்படையாக பேச்சு..!

Author: Selvan
13 December 2024, 2:50 pm

மம்முட்டியின் ஆதங்க பேச்சு

மம்முட்டி, மலையாள சினிமாவின் தலைசிறந்த திறமையான நடிகர், தனது நடிப்பால் தென்னிந்திய திரையுலகின் மைல்கல் நாயகனாக திகழ்கிறார்.

70 வயது ஆனாலும் அவர் தனக்கே உரித்தான பாதையில் ,கேரக்டர்களை தேர்வு செய்து சிறந்த முறையில் நடித்து வருகிறார்.மம்முட்டி தனது மாறுபட்ட சினிமா அணுகுமுறையால் தன்னை தனித்துவமாக வெளிப்படுத்துகிறார்.

Mammootty's frustration

அவரது மகன் துல்கர் சல்மான் தென்னிந்திய சினிமாவில் நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை அமைத்து வருகிறார்.குறிப்பாக, லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் அவரின் திறமையை உலகளவில் வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் நடந்த விருது விழா மேடையில் மம்முட்டி பேசும் போது,தமிழ் சினிமா நடிகர்களின் நடத்தை குறித்து வெளிப்படையாக கூறியதோடு,அவருடைய ஆதங்கத்தை கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: பா.ரஞ்சித் இயக்கும் “வேட்டுவம்”….கெத்தா களமிறங்கும் பிரபல மலையாள நடிகர்…!

“நான் தமிழ் முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னுடைய படங்களைப் பார்ப்பதில்லை. கேட்டால், அந்த படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்”என்று சொல்வார்கள்.

இது என் மனதில் சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பேசியுள்ளார்.மம்முட்டியின் இந்த உருக்கமான கருத்து ரசிகர்களிடையே வைரலாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?