மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற இடியன் சந்து என்கிற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்த சட்டையை பார்த்து பலரும் வியந்து போனார்கள். வெள்ளை நிறத்தில் மம்முட்டி அணிந்து வந்த சட்டையில் யாரோ தவறுதலாக பேனாவில் இருந்த ஊதா மையை தெளித்து விட்டார்களோ என்று நினைக்கும் விதமாக அந்த சட்டை இருந்தது.
இந்த சட்டையை வடிவமைத்தவர் மம்முட்டிடியின் தீவிர ரசிகர் ஜெஸ்பர் கோட்டக்குன்னு என்பவர். இவர் துபாயில் வசித்து வருகிறார்.கடந்த சில வருடங்களாக கழுத்துக்கு கீழே உடல் இயங்காத வகையில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மம்முட்டியை எப்படியும் சந்தித்து விட வேண்டும், அப்போது அவருக்கு ஒரு பரிசும் அளிக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.மம்முட்டி வித விதமாக சட்டை அணிபவர் என்பதை அறிந்து பிரத்யேகமாக துணியை வரவழைத்து தனது பற்களுக்கு இடையே தூரிகையை பிடித்து துணியில் டிசைன் செய்து பின்னர் அதை சட்டையாக மாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்முட்டி தான் நடித்த டர்போ என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக துபாய் வந்தபோது அங்கிருந்த மம்முட்டிக்கு நெருங்கிய ஒரு நண்பரின் மூலமாக மம்முட்டியை சந்திக்கும் வாய்ப்பு ஜெஸ்பருக்கு கிடைத்தது.
அப்போது தான் உருவாக்கிய சட்டையை பரிசாகக் கொடுத்ததுடன், தான் வரைந்திருந்த மம்முட்டியின் ஓவியம் ஒன்றையும் அவருக்கு பரிசளித்தார் ஜெஸ்பர்.
ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மம்முட்டி அந்த சட்டையை பயன்படுத்தாமல் இருந்தார். மம்முட்டி மறந்து விட்டாரோ என்கிற சந்தேகம் ஜெஸ்பருக்கு இருந்தது. இந்த நிலையில் மறக்காமல் அந்த சட்டையை ஒரு விழாவிற்கு அணிந்து வந்து தனது ரசிகரின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார் மம்முட்டி.அதை அறிந்த ஜெஸ்பர் தனது சமூக வலைத்தள அக்கவுண்டில் தாங்க் யூ மமூக்கா என பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.