தூக்கத்தில் கதை கேட்டு வேண்டாம் என அனுப்பிய விஜய்.. வெறுப்பில் சென்ற இயக்குனர் வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
28 December 2023, 3:10 pm

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பல நட்சத்திரங்கள் விஜய் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் மணி பாரதி விஜய், அஜித், சூர்யா பற்றி பல விஷயங்களை சித்ரா லக்ஷ்மணன் பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அதில், விஜய்யுடன் நன்றாக பழகி இருந்து, இரண்டு முறை அவரிடம் கதை கூறி இருக்கிறேன். அவரது தந்தை SAC அவருடன் சேர்ந்து கதை கேட்பார். ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்திற்கு SAC வரச் சொல்லியதை மறந்துவிட்டார். அந்த சமயத்தில், விஜய் தூங்கி கொண்டு இருந்தார் அவரை எழுப்பி கூப்பிட்டு வரச் சொல்லி இருந்தார் . தூக்கத்தில் இருக்கும்போது எப்படி கதை புரியும் என்பதற்காகவே இன்னொரு நாள் வந்து சொல்லுங்கள் என்று கூறியும் மறுமுறையும் கதை கேட்டார் விஜய்.

vijay sac-updatenews360

கதையை கேட்டுவிட்டு அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்களில் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார். அதன் பின்னர் SAC என்னிடம் கதை எனக்கு பிடித்திருக்கிறது. விஜய்க்கு பிடிக்கவில்லை என்று கூறினார். உங்களுக்கு ஸ்கிரீன் பிளே நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் பண்ணலாம் என்று கூறினார். அதன் பின்னர் இரண்டாம் முறை வேறொரு கதையை கூறட்டுமா என்று கேட்டு ஒரு நாள் வர சொன்னதும் போனேன். சாரி இந்த கதையும் பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

leo vijay

ஆனால், இதுவரை 20 பேரை இயக்குனர் ஆக்கி இருப்பேன். அவர்கள் யாரையும் எனக்கு தெரியாது கதை பிடித்தால் நடிப்பேன் உங்களை இயக்குனராக ஆசைப்படுகிறேன் நீங்கள் எனக்கு பிடித்த மாதிரி கதை கூறாமல் இருக்கிறீர்கள் என்று விஜய் தன்னிடம் கூறியதாக மணி பாரதி தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 405

    0

    0