மணிரத்தினம் மனுஷனே இல்லை…. என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டார் – புலம்பிய பிரபலம்!

Author: Shree
20 November 2023, 12:32 pm

தமிழ் சினிமாவில் வரலாற்று இயக்குனரான மணிரத்தினம் காலத்தால் அழிக்கமுடியாத படைப்பாளினியான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தர வர்க்க மக்களின் நிலைப்பாடு, இராமாயண போன்ற பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் மக்களை பின்னணியாக கொண்டு தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் படமெடுத்து மக்களை திரை ரசனையில் மூழ்கடித்தார்.

சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்திருக்கிறார் மணிரத்தினம். பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி அறிமுகம் ஆனார். அப்படத்தை தொடர்ந்து இதய கோவில், பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், தளபதி , ரோஜா , பம்பாய், இருவர், அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ” பிரபல தயாரிப்பாளரான மாணிக்க நாராயணன், ” மணிரத்தினம் மனுஷனே இல்லை. என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டார்” என புலம்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், அவரால் தான் கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம் பெரும் நஷ்டம் அடைந்தது. அவர் நினைத்திருந்தால் பணம் கொடுத்து உதவியிருக்கலாம் ஆனால், செய்யவில்லை என அவர் வருத்தத்துடன் கூறினார். இவர் முன்னதாக அஜித்தை குறித்து இதே போல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது .

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!
  • Close menu