‘இப்படி ஒரு கேவலமான செயலை மணிரத்தினத்திடம் இருந்து எதிர்பாக்கல’.. சினிமா வாழ்க்கையை தொலைத்த இயக்குனர்..!
Author: Vignesh19 December 2022, 7:00 pm
திறமையான கதை மூலம் பலரையும் கவர் ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதித்துள்ளார்.
முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 500 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்னர்.
இந்த நிலையில், மணிரத்தினத்தை பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொல்லும் நிலையில் ஒரு இயக்குனருக்கு மோசமான ஒரு சம்பவத்தை செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மௌன குரு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சாந்தகுமார் என்பவர்.
இவர் தற்போது வரை சரியாக வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படபிடிப்பு கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதியில் நடந்துள்ளது. அங்குதான் மணிரத்தினத்திற்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. மணிரத்தினம் அடிக்கடி அங்கு சென்று வருவார்.
அந்த சமயத்தில் இந்த படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது தனது கெஸ்ட் ஹவுஸுக்கு மணிரத்தினம் வந்துள்ளார். அங்கு இருக்கும் படப்பிடிப்பு குழுவிற்கு இந்த விசயம் தெரியாமல் இருந்துள்ளது. படபிடிப்பின் லைட்டிங் வெளிச்சம் வீட்டின் அருகே விழுந்து விட்டது.
இதைப்பற்றி மணிரத்தினம் படப்பிடிப்பு குழுவினரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போலீசுக்கு போன் செய்து என்னை தொந்தரவு செய்கின்றார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டி அடிங்கள் என்று மணிரத்தினம் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசாரம் அங்கு சென்று படபிடிப்பு நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.
சினிமாவில் பழைய இயக்குனர்களில் முன்னோடியாக இருக்கும் மணிரத்னமே இப்படி ஒரு கேவலமான விஷயத்தை அநாகரீகமாக செய்துள்ளார் என்று தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.