நான் உன்னை நீங்க மாட்டேன்.. இணையத்தில் வைரலாகும் மணிரத்னம், சுஹாசினி திருமண புகைப்படம்..!
Author: Vignesh8 February 2024, 11:38 am
80 காலகட்டத்தில், நடிகை சுஹாசினி பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை குவித்தார்.
இதனிடையே, சுஹாசினி 1988 -ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டு, தற்போது சுஹாசினி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதலில் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை மணிரத்னம் பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.

மணிரத்னம் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகி இருந்தது.
நாயகன் படத்திற்கு பின்னர் மீண்டும் கமல், மணிரத்தினம் கூட்டணி இணைந்துள்ளனர். மணி ரத்னம் – சுஹாசினி இருவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.