மணிரத்னம் எல்லாம் ஒரு மனுசனா?.. சொந்த அண்ணனின் தற்கொலைக்கு காரணம் அவர் தான்..!
Author: Vignesh11 May 2024, 3:59 pm
மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதலில் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை மணிரத்னம் பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
மேலும் படிக்க: குழந்தை நட்சத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் Torture.. அவரே வெளியிட்ட உண்மை..!
மணிரத்னம் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகி இருந்தது. நாயகன் படத்திற்கு பின்னர் மீண்டும் கமல், மணிரத்தினம் கூட்டணி இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் அவர்களின் குடும்ப ரகசியம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மணிரத்தினத்தைப் போல் அவரது அண்ணன் ஜிவி எனும் ஜி வெங்கடேசன் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்தவர்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
மேலும் படிக்க: எந்த முட்டாளாவது அப்படி பேசுவாங்களா?.. செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டு அழுத குஷ்பூ..!
அவரது தற்கொலைக்கு காரணம் மணிரத்தினம் தான் என்று பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஓபன் ஆக பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஜீவி தன்னை பார்க்க அடிக்கடி தன் அலுவலகத்திற்கு வருவார் என்றும், தயாரிப்பாளராக இருக்கும் சமயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் தான் அவர் இருந்தார் என்றும், ஒரு முறை திடீரென இரு நாட்கள் காணாமல் போய்விட்டார்.
ஒருநாள் என்னுடைய வீட்டிற்கு வந்து நான் தற்கொலை செய்ய நினைத்தேன் என்று கூறினார். அப்படி அவர் கூறியதும் நான்தான் இருக்கேன்ல உங்கள் பண பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன். அது பற்றி பலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் அதைப்பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம் என்று சத்தம் போட்டு கூறியதாகவும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்புச் செழியன் பண விஷயமாக என்னை மிகவும் டார்ச்சர் செய்கிறார் அவரை ஆப் செய்ய 60 லட்சம் கொடுக்குமாறு ஜீவி தன்னிடம் கேட்டார். தன்னிடம் அக்கவுண்டில் பணம் இல்லை என்று கூறியதும், சும்மா 60 லட்சம் எழுதிக் கொடு அன்புச் செழியனை சில நாட்கள் சமாளிக்கிறேன் என்று தன்னிடம் செக்கை வாங்கிக் கொண்டு சென்றதாக மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து மாணிக்கம் நாராயணன் வீட்டிற்கு ஜீவி தொடர்பு கொண்ட போது கோபாலபுரத்தில் ஒரு விழாவிற்கு சென்று உள்ளதாக அவரது மனைவி கூறியிருக்கிறார். அந்த நாளிலே ஜீவியும் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், உங்கள் தம்பி மணிரத்தினம் இருக்கிறாரே அவரை ஒரு படம் எடுத்து தர சொல்லுங்கள். அதன் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று கேட்டதற்கு அவன் எல்லாம் ஒரு மனுஷனா அவன பத்தி பேசாதே என்று கோபத்தில் கூறினாராம் ஜீவி.
அண்ணனின் பணப்பிரச்சனையில் எந்தவித உதவியும் செய்யாமல் இருந்த மணிரத்தினம் அந்த உதவியை செய்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். அவர் குடும்பத்துடன் சந்தோஷமாக ஜீவி இருந்திருப்பார். எல்லோரும் மணிரத்னத்தை கொண்டாடுகிறார்கள் அவர் அண்ணன் தற்கொலைக்கு அவரே ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவர் எல்லாம் என்ன மனுஷன் நான் அவரால் பல கோடி நஷ்டம் அடைந்தது தான் மிச்சம் என்றும், 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது உலகத்தில் இனி இருந்து என்ன செய்யப் போகிறார் என்று கண்டபடி மாணிக்கம் நாராயணன் பேசியுள்ளார்.