ஒட்டுமொத்த தியேட்டரையும் ஆக்கிரமித்த “லவ்வர்”…. தலையில் துண்டு போட்ட “லால் சலாம்”!
Author: Rajesh14 February 2024, 6:31 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் உலகம் முழுக்க வெளியான திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கி வியாபாரம் மந்தமாகி விட்டது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள லவ்வர் திரைப்படம் மொத்த திரையரங்கியும் ஆக்ரமித்துவிட்டது. ஆம், ஆடியன்ஸ் லால் சலாம் படத்தை தவிர்த்து லவ்வர் படத்திற்கு பெரும்பாலானோர் படையெடுப்பதால் ரஜினியின் லால் சலாம் தலையில் துண்டு போட்டுவிட்டது.