மணிகண்டன் பின்னர், இவர் ஒரு வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன்னுடைய மீடியா வாழ்க்கையை துவங்கினார்.அதே நேரத்தில் பல திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பின்னணி பேசி வந்தார்.
மணிகண்டன் பீட்ஸா: வில்லா திரைப்படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடிகராக அறிமுகமான இவர், நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.புஷ்கர்-காயத்ரியின் மூன்றாவது இயக்கமான விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனம் எழுதினார். மேலும் இப்படத்தில் ஒரு காவலர் வேடத்திலும் நடித்திருந்தார்.
காலா படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் மணிகண்டன். காலா திரைப்படத்தின் போது ரஜினிகாந்த் அழைப்பதாக ஒருவர் வந்து அழைத்ததாகவும் ரஜினிகாந்த் சாரா? என்று கேட்டதற்கு ஆமாம் ரஜினிகாந்த் தான் அழைக்கிறார் என வந்தவர் சொன்னதாகவும் ரஜினிகாந்திடம் சென்று சார் கூப்டீங்களா என கேட்டதற்கு அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமரவைத்து விக்ரம் வேதா பற்றி ரஜினிகாந்த் விசாரிக்க ஆரம்பித்ததாக சொன்னார். கணவனும் மனைவியும் சேர்ந்து படம் எடுக்குறாங்களா ?ஆமாம் சார்.புஷ்கர் காயத்ரி கணவன் மனைவி…ஆமாம் சார் கணவன் மனைவி.. திரைக்கதை இயக்கம் எல்லாமே ரெண்டு பேரும் சேர்ந்து தான் பண்ணுவாங்களா? ஆமாம் சார் சேர்ந்துதான் பண்ணுவாங்க… யார் ஷார்ட் ஓ கே பண்ணுவாங்க? ரெண்டு பேரும் தான்..கணவன் மனைவி சேர்ந்து குடும்பம் நடத்துவாங்க இவங்க படமே பண்றாங்க என்று ரஜினிகாந்த் ஸ்டைல் ஆக பதில் சொன்னதாகவும் அவர் ஒரு எளிமையான மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர் என தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் அவருடைய இந்த நேர்காணல் இப்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.