என்னை மதம் மாற்றிவிட்டாரா கணவர் உசைன்? சர்ச்சை கேள்விக்கு நறுக்குன்னு பதில் சொன்ன மணிமேகலை!

Author: Shree
5 July 2023, 9:11 pm

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா லாக் டவுனில் சொந்த ஊர் கிராமத்திற்கு சென்று கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில் மணிமேகலை முக்காடு போட்டுக்கொண்டு முஸ்லீம் பெண்ணாக கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட இதை பார்த்து சிலர் உங்கள் கணவர் உசைன் உங்களை முஸ்லீம் ஆக மதம் மாற்றிவிட்டாரா என கேள்வி எழுப்பினார்கள். இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்த மணிமகேலை,

“எனக்கு எல்லா சாமியும் ஒன்று தான். நான் எல்லா சாமியையும் வணங்குகிறேன். நாங்கள் மசூதிக்கு சென்றதை விட ஜோடியாக கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வெளியிட்ட வீடியோக்கள் தான் அதிகமாக போட்டிருக்கிறோம். அப்படியிருக்கும் போது ஏன் மதம் மாறப்போகிறேன்? எனவே நான் இன்னும் இந்துவாக தான் இருக்கிறேன் என மறைமுகமாக கூறி சர்ச்சைக்கு முறுப்புள்ளி வைத்தார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!