‘இனி நான் வரமாட்டேன்’.. Cook With Comali-யில் இருந்து திடீரென வெளியேறிய மணிமேகலை..! வைரலாகும் ட்வீட்
Author: Rajesh26 February 2023, 6:30 pm
கடந்த 2010ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.
அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மணிமேகலை. குக் வித் கோமாளி ஷோவில் புகழ், சிவாங்கி, சுனிதா, பாலா மணிமேகலை உள்ளிட்டோர் மக்கள் பேவரைட். இந்நிலையில் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார்.
‘கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை” என அவர் கூறி இருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில், “இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன். 2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு ஆதரவையும் அன்பையும் தந்துள்ளீர்கள்.
எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன். குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன் என நினைக்கிறன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இதே அன்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.