VJ மணிமேகலையை கொத்தா தூக்கிய பிரபல சேனல்..விஜய் டிவி-க்கு ஆப்பு ரெடி.!

Author: Selvan
14 February 2025, 7:55 pm

மீண்டும் களத்தில் இறங்கும் VJ மணிமேகலை

பல வருடமாக நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்த மணிமேகலைக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் விஜய் டிவியில் நுழைந்த பிறகு,இவருடைய மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்தது,அதோடு பெயர்,புகழ் எல்லாம் அவரை தேடி வந்தது.

இதையும் படியுங்க: கிஸ் அடித்து காதலில் விழுந்தாரா கவின்…மஜாவா வெளிவந்த KISS பட டீசர்.!

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கும் ப்ரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியே வந்தார்,அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவியில் நடந்த பல திடுக்கிடும் சம்பவங்களை வெளிப்படையாக கூறினார்.

இதனால் பலரும் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்தனர்,இந்த நிலையில் தற்போது விஜய் டிவி க்கு சமமாக வளர்ந்து வரும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் ஆர் ஜே விஜயுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதால்,மணிமேகலையை ஜீ டிவியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Lollu Sabha actor Srigo Udhay health update பெரும் சோகம்…பரிதாப நிலையில் லொள்ளு சபா காமெடி நடிகர்..!
  • Leave a Reply