சன்மியூஸிக் பாட்டு தான் எங்களை காதலிக்க வச்சது… மனம் திறந்த மணிமேகலை!

Author: Shree
28 March 2023, 9:23 pm

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா லாக் டவுனில் சொந்த ஊர் கிராமத்திற்கு சென்று கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில் உசைன் மீது காதல் எப்படி ஆரம்பித்தது என்பதை குறித்து கூறியுள்ள மணிமேகலை, மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் வரும் ரீமிக்ஸ் பாடலில் லாரன்ஸ் உடன் சேர்ந்து உசைன் ஒரு சில ஸ்டெப்புகளை ஆடியிருப்பார். அந்த பாடல் சில மியூசிக்கில் வரும் போது எல்லாம் இவருடைய டான்ஸ்சை பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான் என்று மனசுக்குள் சொல்லி கொண்டே இருந்தது.

பின்னர் இவரை பாராட்ட வேண்டும் என்று பல நண்பர்கள் மூலம் அவரது நம்பரை வாங்கினேன். கால் பண்ணலாமா? வேண்டாமா? என்று ஒரு மணி நேரம் யோசித்தேன். அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு கால் பண்ணினேன். முதலில் பேசியபோது ஒரு sparks தோன்றியது. போனில் இவருடைய பெயரை கிரஷ் என்று சேவ் செய்து பின்னாளில் அது chotti என்று ஆனது என காதல் பயணம் குறித்து பேசியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி