CWCயில் இருந்து விலகிய மணிமேகலை: வைரலாகும் ஸ்ருஷ்டியின் உருக்கமான பதிவு..!

கடந்த 2010ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். சன்டிவியில் இருந்து 2019ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மணிமேகலை.

குக் வித் கோமாளி ஷோவில் புகழ், சிவாங்கி, சுனிதா, பாலா மணிமேகலை உள்ளிட்டோர் மக்கள் பேவரைட். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், செஃப் தாமு, வெங்கடேஷ் பட் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிற கோமாளிகள், போட்டியாளர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்து, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகிய ஒரு வாரம் கழித்து உருக்கமான மெசேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஸ்ருஷ்டி. அதில் ‘ஹாய் மணி, முதலில் நான் உங்களை செட்டில் மிஸ் பண்றேன், இரண்டாம் நாள் ஷூட்டிங் போது, நான் சொன்னது உங்களுக்கு நியாபகம் இருக்கும் என நினைக்கிறன், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நிகழ்ச்சியில் அனைவரையும் விட உயர்ந்து நிற்கும் பெண்மணி நீங்கள்.

உங்கள் நடிப்பை நான் உண்மையிலேயே ரசித்தேன். நீங்கள் நல்ல நபர். நான் உங்களுடன் CWC செட்டில் இருந்தது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். கடைசி நாளில் நானே வருவேன் கெட்டப்பில் வந்த போது உன்னுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உங்கள் வாழ்வில் நீ எடுக்க இருக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

7 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

7 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

8 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

8 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

9 hours ago

This website uses cookies.