கழுத்தை நெறிக்கும் கடன்.. வாய்ப்பில்லாமல் பண கஷ்டத்தில் தவிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்..!

Author: Vignesh
3 February 2024, 1:17 pm

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில், மணிமேகலைக்கு சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து எந்த வாய்ப்பும் வருவதில்லையாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் எண்டு கார்டு போட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த வாய்ப்பு மணிமேகலைக்கு கிடைக்கவில்லை. எந்த வாய்ப்பு இல்லாமல் மணிமேகலை பணக்கஷ்டத்தில் இருந்து வருவதாக, அதை சமீபத்தில் அவரே கூறி உள்ளார். தற்போது, தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் ஹவுஸிங் லோன் கூட கட்ட முடியவில்லை என வருத்தமாக தெரிவித்துள்ளார்.

manimegalai
  • Rashmika Mandanna injured at gym பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!