மகாபாரதக் கதாப்பாத்திரத்தில் ரஜினி; குறிப்பால் உணர்த்திய சந்தோஷ் சிவன்!..
Author: Sudha5 ஜூலை 2024, 1:18 மணி
சந்தோஷ் சிவன் உலக அளவில் புகழ் பெற்ற இந்திய ஒளிப்பதிவாளர் , திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர். ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் பட்டம் பெற்றவர் சந்தோஷ் சிவன். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் முதன்மையானவர். பன்னிரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள், நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்.
ரஜினி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பதிவு செய்தார் சந்தோஷ் சிவன். இத்திரைப்படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கும்.
அதில் குந்தி தன் மகனான கர்ணனை விட்டுச் செல்வது போல தன் தாயான ஸ்ரீவித்யாவால் கைவிடப்படுவார் ரஜினி. சூரிய பகவானின் மகன் கர்ணன்.தளபதி திரைப்படத்தில் ரஜினியின் பெயர் சூர்யா.கர்ணனின் தம்பி பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன்.இதில் அர்ஜுன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அரவிந்த்சாமி. இது கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையேயான நட்பை விளக்கும் திரைப்படமாக அமைந்தது. துரியோதனன் கதாபாத்திரம் மம்முட்டி உடையது.
இதை குறிப்பால்உணர்த்தும் விதமாக அழகாய் ஒளிப்பதிவு செய்திருப்பார் சந்தோஷ் சிவன்.சூரியன் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரஜினியை மிக அழகாக படம் பிடித்திருப்பார்.
தளபதி திரைப்படம் என்றும் மக்கள் மனதில் வாழும் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது.
0
0