ஆணாதிக்கம் ஜாஸ்தி.. அப்படி இருந்தால் சொகுசா இருக்கலாம் – மனம் திறந்த மனிஷா கொய்ராலா..!
Author: Vignesh10 May 2023, 12:50 pm
90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.
அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியால் தான் எனக்கு சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் கூறிய அவர் தற்போது, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி என்ற படத்தில் நடித்து வருவதாகவும், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மீண்டும் இணையப் போகிறேன் என்றும், பிஸியாக இருந்தால் தான் பிரபலமான நடிகையாக அறியப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தானும் அப்படித்தான் பிஸியாக இருப்பதாகவும், ஆனால் அந்த பரபரப்புக்காக தான் செய்த படங்களில் சில மோசமானவை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இப்போது தான் அப்படியில்லை என்றும், தன்னால் இது வேண்டாம் என்று நிராகரிக்க முடிகிறது எனவும், அதுதான் வெற்றி எனக் கருதுவதாகவும், அதுதான் சொகுசு என்றும் புரிந்து கொண்டதாகவும், திரைத்துறை என்பது ஆணாதிக்கம் நிறைந்தது என்றும்,
அதனால் நடிகைகளுக்கு தங்களை நிரூபிக்க குறைந்த அளவிலான வாய்ப்புதான் இருக்கும் எனவும், ஆனால் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு விதிவிலக்கு என்றும், அவரால் மட்டுமே பெண்களை வைத்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களைக் கொடுக்க முடியும் எனறும், அவருடைய கங்குபாய் கத்தியாவாடி பார்த்து தான் மிரண்டு போனேன் எனத் மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.