குடிக்கு அடிமை… போதையிலே நடிப்பேன் – வாழ்க்கை சீரழித்துக்கொண்டது குறித்து மனிஷா கொய்ராலா!

Author: Shree
23 October 2023, 7:37 pm

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

Manisha koirala - Updatenews360

1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. சினிமாவின் உச்சத்தில் இருந்துக்கொண்டிருந்தபோதே மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திரைவாழ்க்கையை இழந்தார். இதனால் சில வருடம் படங்களில் நடிக்காமல் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

இந்நிலையில் தன் வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து பேசிய அவர், ” நான் சில நண்பர்கள் மூலம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். நான் ஆரம்பத்தில் நல்ல குணம் உடையவராக தான் இருந்தேன். ஒரு சில காட்சிகளில் நடிக்க மிகவும் கூச்சப்பட்டேன். அதனால் தான் அதுபோன்ற காட்சியில் நடிக்க குடித்துவிட்டு செல்வேன்.

குடிபோதையில் ரொமான்டிக் காட்சியில் நடித்தேன். இதனால் நாளுக்கு நாள் குடி பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். ஆல்கஹால் ரத்தத்தில் ஊறிப்போனதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது அனைத்தும் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள். அதன் பின்னர் புற்றுநோயால் போராடி குணமானேன். தற்போது ஆன்மீகம், யோகா என மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!