விவாகரத்துக்கு பின் புற்றுநோயால் அவதிப்பட்ட மனிஷா கொய்ராலா – மனதை ரணமாக்கும் புகைப்படம்!

Author: Shree
4 May 2023, 9:48 am

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. இதனிடையே அவர் புற்று நோயால் பாதிக்கபட்டு அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் சுமார் 1 வருடம் சிகிச்சை எடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் மொட்டையடித்து உடல் மெலிந்து ஒரு நடிகைக்கான அடையாளத்தையே இழந்து உயோருக்கு போராடியுள்ளார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வந்துள்ள மனிஷா புற்றுநோய் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 734

    0

    1