அதை போட்டுக்கொண்டு தான் படுக்கையறை காட்சியில் நடிப்பேன் – மனிஷா கொய்ராலா பளீச்!

Author: Rajesh
23 January 2024, 12:38 pm

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

manisha koirala

1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. சினிமாவின் உச்சத்தில் இருந்துக்கொண்டிருந்தபோதே மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திரைவாழ்க்கையை இழந்தார். இதனால் சில வருடம் படங்களில் நடிக்காமல் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

manisha koirala-updatenews360

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அதன் அனுபவங்களை குறித்தும் பேசிய மனிஷா கொய்ராலா, நான் படுக்கையறை காட்சிகளில் நடிக்கவே ரொம்ப தயங்குவேன். அந்த நேரத்தில் அதை மறக்க மது அருந்திவிட்டு தான் நடிப்பேன். அதுவே நாளடைவில் பழக்கம் ஆகிவிட்டது. பின்னர் நான் மதுபோதைக்கு அடிமையாகி விட்டேன். அதனால் தான் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன். மது தான் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது என வேதனையோடு தெரிவித்தார். .

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 339

    0

    0