தோ வந்துடும்.. தோ வந்துடும்னு சொன்னாங்க.. சம்பளம் கூட கொடுக்கல; புலம்பும் மனிஷா யாதவ்..!

Author: Vignesh
17 February 2024, 3:45 pm

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

manisha yadav - updatenews360

திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. கவர்ச்சி புகைப்படங்களை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

Manisha-Yadav -updatenews360

இதனிடையே, மனுஷா யாதவ் நடித்துள்ள நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக மனுஷா யாதவ் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருக்கிறார். பேட்டி ஒன்றில் படம் குறித்து பேசுகையில் மனிஷா யாதவ் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

manisha yadav - updatenews360

அதாவது, வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாகவும், ஆனால் முத்தக் காட்சிகள் நடிக்கவே மாட்டேன் என்று அதற்கு மறுத்ததால் அவரது கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு நடிக்க கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

manisha yadav

மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கான சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்றும், நினைவெல்லாம் நீயடா திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகாரில் நினைவெல்லாம் நீயடா இந்த படத்தில் நடிக்க 3 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு, இன்னும் அந்த சம்பள பாக்கியை தரவில்லை படம் வெளியாகும் சூழலில் அதை வசூலித்து தர வேண்டும் என மனிஷா யாதவ் குறிப்பிட்டார்.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!
  • Close menu