மணிவண்ணன் இதனால் தான் இறந்தார்… 10 வருடத்திற்கு பின் உண்மையை உரக்க சொன்ன தங்கை!

தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆன மணிவண்ணன் 400கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், பாரதிராஜாவின் உதவியாளராக சினிமா பணியை துவங்கினார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் , சத்யராஜ், கார்த்திக், மோகன், மாதவன், விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மணிவண்ணன் வாழ்க்கை வரலாறு குறித்து சுருக்கமாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆம், மணிவண்ணன் முதன் முதலில் இயக்குனர் ஆகவேண்டும் என வாய்ப்பு தேடி பாரதிராஜாவின் வீடு வாசலில் காலையிலே சென்று காத்துக்கிடந்து பாரதிராஜாவின் கார் வெளியில் வரும் போது அவருக்கு வணக்கம் வைப்பாராம். இப்படி தொடர்ந்து பல நாட்கள் செய்து வந்துள்ளார். அதை கவனித்து வந்த பாரதிராஜாவின் மனைவி மணிவண்ணனை அழைத்து கேட்டதற்கு கையில் பாரதிராஜா படத்தின் ஸ்க்ரிப்ட்டை ஒரு வரி விடாமல் எழுதி வைத்திருந்ததை காட்ட திறமையை பார்த்து பிரம்மித்துப்போய் கணவரிடம் சிபாரிசு செய்து வாய்ப்பு கொடுத்தாராம்.

அதன் பின்னர் பாரதிராஜாவுக்கு பல உதவிகள் செய்து அவருடனேயே இருந்து உதவி இயக்குனராக வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக படம் இயக்கும் நுணுக்கங்களை தெரிந்துக்கொண்டு வாய்ப்பு வாங்கி முன்னேறினாராம். அதன் பின்னர் மணிவண்ணன் பாரதிராஜாவை கடவுளாக பார்த்தாராம். பின்னர் மணிவண்ணன் தனது 58 வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடலை தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தான் நேர்ந்தது என அப்போது பல செய்திகள் வெளியாகியிருந்தது. இது குறித்து மணிவண்ணன் இறந்து சுமார் 10 வருடங்களுக்கு பிறகு தன் அண்ணனின் இறப்பு குறித்து பேசியுள்ளார் அவரது சகோதரி, ” என் அண்ணன் குடிப்பழக்கத்தால் இறக்கவில்லை. அவர் மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அவர் குடி பழக்கத்தை விட்டுவிட்டார். அவருக்கு புற்றுநோய் தாக்கம் அதிகமானதால் தான் இறந்துவிட்டார். அண்ணன் இறந்த சில நாட்களிலேயே அண்ணியும் இறந்துவிட்டார் என அவரது சகோதரி வேதனையுடன் கூறினார்.

Ramya Shree

Recent Posts

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!

மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…

7 hours ago

கமலுக்கு பேரனாக நடித்த பான் இந்திய ஹீரோ..அப்பவே கலக்கி இருக்காரே.!

சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…

7 hours ago

மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!

மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…

8 hours ago

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்.. சிக்கும் அரசு? அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…

8 hours ago

புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!

மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

9 hours ago

விஜய்யை பின்தொடரும் கீர்த்தி சுரேஷ்? திருமணத்திற்கு பின் சர்ச்சையை கிளப்பிய இயக்குநர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…

10 hours ago

This website uses cookies.