ரொமேண்டிக் புகைப்படத்தை வெளியிட்டு காதலை வெளிப்படுத்திய பிரபல நடிகரின் மகன்… வாழ்த்துக்களை சொல்லும் ரசிகர்கள்..!!
Author: Vignesh1 November 2022, 2:30 pm
நடிகர் கெளதம் கார்த்தி – மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான போது, அதனை தொடர்ந்து மறுத்து வந்த மஞ்சிமா தற்போது… ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதலர் உறுதிசெய்துள்ளார்.
மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தேவராட்டம்’ படத்தில் இருந்தே… இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, இது குறித்த செய்திகள் வெளியான போது தொடர்ந்து, இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன் ஒருவழியாக இப்போது தன்னுடைய காதலை உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் தான், மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்தி இருவரும் சேர்ந்து கலந்து கொண்ட, நிச்சய தார்த்த விழா புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளதால், கூடிய விரைவில் மஞ்சிமா – கெளதம் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே மாதிரியான உடையில்… கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இன்ஸ்டாகிராம் பதிவில் இவர் கூறியுள்ளதாவது, ‘மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது… நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர உதவினாய்!!
ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக உணரும்போதெல்லாம், நீங்கள் என்னை மேலே இழுக்கிறீர்கள். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். நான் உன்னை நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதற்காக தான். நீங்கள் எப்போதும் எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் இருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் பலர் இந்த இளம் ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.