ஹனிமூன் பிளான் போட்ட கெளதம் கார்த்திக்… ஷாக் கொடுத்த மஞ்சிமா மோகன் : திருப்புமுனை ஏற்படுத்திய அந்த சம்பவம்.!
Author: Vignesh14 December 2022, 7:00 pm
கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் நடிகராக அறிமுகமாகினார். இப்படம் பெரியளவில் வரவேற்பு பெறாமல் போனதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கடந்த மாதம் தெரிவித்து நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார்.
மஞ்சிமா மோகனை திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சியில் சிலர் உடல் ரீதியாக விமர்சித்து கஷ்டப்படுத்தியுள்ளனர். இதனால் கெளதம் கார்த்திக்கும் மன வருத்தத்தில் தள்ளப்பட்டுள்ளார். மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்ற குறிக்கோளில் கெளதம் இருந்தும் இப்படியான சம்பவம் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் திருமணம் முடிந்ததும் மஞ்சிமா மோகன் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்துள்ளாராம். தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மஞ்சிமா மோகன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.